உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

செவ்வாய், 25 ஜனவரி, 2022

TAMIL Eelam news ba72

 30 வருடப் போராட்டத்திற்கு பணத்தையும் உயிரையும் ஒரே வீட்டில் இருந்து கொடுத்த ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள் என்பதை சம்மந்தன் போன்ற நம்பிக்கை துரோகிகள் மறந்து விடக் கூடாது

. தமிழீழம் என்பது ஐம்பதினாயிரம் மாவீரர்களின் சொத்து என்பதை சம்மந்தன் போன்ற முட்டாள்கள் உணர வேண்டும்.



தமிழ் தலைமைகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் செருப்படி!! (படங்கள்)


13ஆம் திருத்தச் சட்டம் ஆரம்பப்புள்ளி அல்ல - புதைகுழி, தமிழினத் துரோகி சுமந்திரன் எனும் கோசங்களுடன் ஜேர்மனியில் போராட்டம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.


இதன்போது சிறிலங்காவில் பேசுபொருளாகியுள்ள 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பிலான தமிழ் தலைவர்களின் செயற்பாடு குறித்து கடும் அதிருப்தியும் வெளியிடப்பட்டுள்ளது.


இப்போராட்டத்தின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மற்றும் அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரது படங்களை காட்சிப்படுத்திய போராட்டக்காரர்கள், பாதணிகளால் தாக்கியுமுள்ளனர்.


பின் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்து வெளியிடுகையில்,


“எங்களுடைய மக்களின் வேதனைகளையும் வலிகளையும் சுமந்து, இளம் வயதில் எத்தனையோ இளைஞர்கள், யுவதிகள் தமது உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் இன்று தமிழ் மக்களை அழிக்கும் முகமாக தமிழ் தலைமைகள் துரோகமிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


சம்பந்தன் உட்பட சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சி.வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமிழினத்துக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராகவே இந்தக் கண்டனப் போராட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.


பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் தமது உயிர்களை தியாகம் செய்துகொண்ட நிலையில், பொதுமக்களும் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.


இந்த நிலையில், ஒன்றுமே இல்லாத ஒற்றையாட்சியை இவர்கள் விரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.


இந்த துரோகக் கும்பல்களை தமிழ் மக்கள் அடுத்து வரும் தேர்தல்களில் நிச்சயமாக நிராகரிப்பார்கள். அதனை மீறியும் அவர்கள் தேர்தலில் இறங்கினால் மீளவும் செருப்படி வழங்கப்படுவது உறுதி.


நாங்கள் சர்வதேசத்தை மட்டும் நோக்கி அல்ல, எங்களுடைய இனத்துக்கும், தமிழ் தேசத்திற்கும், எங்களுக்காக உயிர் தியாகம் செய்த தோழர்களுக்கும் யார் துரோகமிழைக்கின்றனரோ? அவர்களுக்கு எதிராக நாங்கள் போராட வேண்டும்.


துரதிஷ்டவசமாக அவர்கள் எமது இனத்துக்கு உள்ளே இருப்பது எங்களுக்கு ஒரு சாபக்கேடு” - என்றனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...