உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 24 ஜனவரி, 2022

mother a68

 வாழ்த்துக்கள் தங்கையே, 

நீ பயின்றது 

நீ முயன்றது 

நீ வென்றது 

அத்தனையும் தனிப்பட்ட உன்னாலும் உன் குடும்பத்தாலும் மட்டுமே. இதற்கு யாரும் உரிமை கொண்டாடிட முடியாது. ஓரிருவரைத் தவிர, நீ வெளிநாட்டுக்கு பயணிக்க இருந்த பயணச்செலவை கூட சமாளிக்க முடியாது திணறிய போது கை குடுத்த உறவுகளைத் தவிர, உனக்கு நல்லுணவளித்து, நல்லுடையளித்து, நல் பயிற்சியளித்து உன்னை வளர்த்துவிட்டவர்களைத் தவிர.

நீ வெல்லும் வரை கண்டு கொள்ளாத முகநூலும் நீ வெற்றிவாகை சூடி வரும்வரை யார் என்றே தெரியாத ஊடகங்களும்/ சமூக ஊடகங்களும் இன்று உன்னை தூக்கி கொண்டாடுகின்றன. அது மனதுக்கு நிறைவானது. இதற்குள் தான் நானும் ஒருவன் உன்னை கண்டு கொள்ளாத தமிழ் அண்ணன். 

நீ வென்று திரும்பிய பின்பும் கூட 

உன்னை யார் என்று கண்டு கொள்ளாது துனுஷ் - ஜஸ்வரியா தம்பதியினரின் திருமண உறவு முறிவைப்பற்றி கதை கதையா எழுதிக்கொண்டிருக்கும் மஞ்சள் ஊடகங்களும், தமிழினத்தின் காப்பாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தி நிற்கும் தலைவர்களும் இன்னும் மௌனித்துக்கிடப்பது மட்டும் தான் மனதின் பாரமாகிறது. 

நீ தமிழிச்சி, 

எவ்வாறு சிறீலங்காவின் தேசியக்கொடியை போர்த்தலாம் என்று ஒருபுறம், 

உன்னை சிறீலங்கா அரசு கவனிக்கவே இல்லை எதற்காக அவர்களின் கொடியை போர்த்தி இனவழிப்பு அரசை நியாயப்படுத்த வேண்டும் என்று ஒருபுறம் கேள்வி எழுப்பும் அதே நேரம், 

சிறீலங்காவின் பிரதமர் தங்கம் வென்ற சிங்கள இளைஞனுக்கு வீடு பரிசளித்ததகவும் சிங்கள இனத்தவரை மதிப்பளிக்கும் இந்த இனவழிப்பு அரசு தமிழிச்சியான உன்னை கண்டு கொள்ளவே இல்லை என்றும் முகநூலில் தம் உள்ளக் கிடக்கைகளை கொட்டுகின்றனர் சிலர். 

நான் ஒன்றை சொல்லவா தங்கையே, 

சிறீலங்காவின் ஆட்சியாளர்களும், அதன் பட்டாளமும், அதனோடு இணைந்து இயங்கும் கறுப்பாடுகளும் என்றும் எம்மினத்துக்கான மதிப்பையோ சரிசமமான வாழ்க்கையையோ தரப்போவதில்லை. மற்றவர்கள் உன் மீதான அன்பிலும் வெறுப்பிலும் பலவற்றை கூறுகின்றார்கள் எழுதுகின்றார்கள். அவற்றை எல்லாம் மனதுக்குள் வைத்து சங்கடமோ சந்தோசமோ பட்டுக்கொள்ளாதே. நீ என்றும் ஒரு தமிழிச்சி என்பதை மறக்காதே. அதே நேரம் எம்மினத்தை கருவறுத்தவர்களையும் நீ மறந்துவிடாதே. அதையெல்லாம் நினைவிருத்தியபடி முன்னேறு. 

உன் வளர்ச்சி பாதையை பாகிஸ்தானில் நடந்த போட்டியோடு முடித்துக்கொள்ளாதே. அதையும் தாண்டி, உலகளாவிய போட்டிகளை நோக்கி அமைத்துக்கொள். 

Asian Games, Commonwealth, Olympic என சர்வதேச தளங்களை நோக்கி அமைத்துக்கொள். அவை உனக்கு இன்னும் இன்னும் படிக்கற்களை உருவாக்கும். 

இன்னும் இன்னும் பயிற்சி செய். 

இன்னும் இன்னும் முயற்சி செய் 

இன்னும் இன்னும் வெற்றிகளை உனதாக்கு. 

அன்பான

புலத்து உறவுகளே,  புலம்பெயர் உறவுகளே, அரசியலாளர்களே, தமிழினத்தின் பிரதிநிதிகளே…! 

தங்கை போன்றவர்களை இனங்கண்டு வளர்த்துவிடவில்லை என்றாலும் தம்மை இனங்காட்டி வெற்றியை தமதாக்கிய இவர்களையாவது மேலும் வளர்த்துவிட வேண்டிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவோமே. தேவையற்ற வாதங்களை விட்டு, அந்தக் கொடி பிடித்தார் இந்தக்கொடி பிடிக்கவில்லை என்ற எம் மனக்குறைகளை விட்டு, “தமிழ் இளையவள் “ என்பதை மட்டும் கருத்தில் எடுப்போமே. தமிழிச்சி வென்றாள் என்ற இனிப்பான செய்தியை உலகுக்கு உரைப்போமே. கிடைத்த தளங்களைப் பயன்படுத்தி களத்தில் வென்றவளை புதுத் தளங்களை உருவாக்கி புதுக்களங்களை வெல்ல வழியமைப்போமே. 

அன்பானவர்களே…! 

தயவு செய்து பாகுபாடு இன்றி எம் பிள்ளைகளைப் போல இவர்களை வளர்ப்போமே. 

ஒன்றாகுவோம் வென்றாகுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...