உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 22 ஜனவரி, 2022

mother a61

 ஐபிசி தமிழ் ஊடக அனுசரணையில் கனடாவில் வெகுவிமர்சையாக இடம்பெறும் தமிழர் நிகழ்வு 


 


 

கனடாவில் வெகுவிமர்சையாக தமிழ் மரபுத்திங்கள் இணையவழி பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.


குறித்த இணையவழி பெருவிழா 2022 22-01-2022 , சனிக்கிழமை கனேடிய நேரம் பிற்பகல் 3:00 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.


தமிழ் மரபு திங்களுக்கான பிரித்தானிய அரச பேரறிவிப்பினைப் பெறும் நோக்கத்துடன் தமிழ் மரபுத்திங்கள் செயல்பாட்டுக் குழுவினர் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் நடாத்தி வருகின்றனர்.


குறித்த நிகழ்வில் நேரலையாக கலந்துகொள்ளவுள்ளோர் இணைப்பு ஊடாக இணைந்துகொள்ளலாம்.


https://us06web.zoom.us/j/81801602741


கனடாவின் பிராம்டன் நகர் வாழ் தமிழ் சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க பிராம்டன் நகரசபையினால் நகரசபையின் பிரதான பூங்காவில் 'தமிழினப்படுகொலை நினைவுத்தூபி' அமைப்பதற்கு அனுமதி வழங்கும் தீர்மானம் கடந்த வருடம் ஜனவரி 20ஆம் நாள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு,கனடாவின் அரசியல் பிரமுகர்களும் கட்சி பேதமின்றி தமது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றார்கள்.


இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்ததுபோன்ற இனப்படுகொலை இனிமேல் உலகின் எப்பகுதியிலும் நடக்காதிருக்கச் செய்யும் செயல்பாடுகளுக்கு உந்துதல் தரும் வகையில் இந்த நினைவுத்தூபி இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. அந்த வகையில்,இதற்கான முதலாவது ஏற்பாட்டாக மாபெரும் நிதிசேர் நிகழ்வு உலகளாவிய ரீதியில் இணையம் வழியாக இன்று ஜனவரி 22ஆம் திகதி சனிக்கிழமையன்று நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...