விடுதலைப்புலிகளை மறுசீரமைக்க முயற்சி - யாழ்ப்பாண இளைஞர்கள் தொடர்பில் நீதிமன்றம் கொடுத்த
விடுதலைப்புலிகளை மீள ஸ்தாபிப்பதற்கு ஊக்குவித்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 சந்தேகநபர்களின் கைரேகைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே அரசாங்க கையெழுத்து பரிசோதகருக்கு இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் மறு அறிவித்தல் வரை சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (TID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் 26 பேரும் யாழ்ப்பாணம் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் என்றும், அவர்கள் விடுதலைப் புலிகளை மறுசீரமைப்பதற்காக பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் என்றும் அவர்கள் 2020 மார்ச் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (TID) நீதிமன்றத்திற்கு அறிவித்தது. புலிச்சாயம் பூசி தமிழ் இளைஞசர்களை கொடுமைப்படுத்தும் சிங்கள அரசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக