உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 22 ஜனவரி, 2022

mother a60

 மட்டக்களப்பில் பெரும் சோகம்: தந்தை பலி! மகன் வைத்தியசாலையில்





மட்டக்களப்பு காத்தான்குடி பிரதானவீதி கல்லடி விபுலானந்தா இசை நடனக் கல்லூரிக்கு முன்பாக வீதியால் சென்ற மோட்டர்சைக்கிள் மீது கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை உயிரிழந்ததுடன் மகன் படுகாயமடைந்துள்ளார்.


இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (22-01-2022) மாலை  05.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.


குறித்த சம்பவத்தில், ஆரையம்பதியைச் சேர்ந்த 50 வயதுடைய சிவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த மகன் மட்டு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் குறித்து தெரியவருவது,


மோட்டர் சைக்கிள் ஒன்றில் தந்தையும் மகனும் காத்தான்குடி பகுதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்துக் கொண்டிருந்தபோது, விபுலானந்தா இசை நடன கல்லூரிக்கு முன்பாக் வோளாண்மை வெட்டும் இயந்திரம் ஒன்றை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை முந்திச் செல்வதற்காக முயற்சித்த வேளை பின்னால் வந்த கனரக வாகனம் மோட்டர் சைக்கிளை மோதியதையடுத்து மோட்டார் சைக்கிள் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டார்கள்.


தூக்கி வீசப்பட்டகள் பின்னால் வந்த ஊழவு இயந்திரத்தில் சிக்குண்டதையடுத்து ஸ்தலத்தில் தந்தையார் உயிரிழந்ததுடன் மகன் படுகாயமடைந்துள்ளார்.

 

இந்த நிலையில், மோட்டார் சைக்கிளை மோதிய கனரக வாகன சாரதி அங்கிருந்து வாகனுத்துடன் தப்பி ஓடியுள்ளார்.


இதில் படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...