உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

mother a22

 தினமும் இஞ்சியை எடுத்துக்கொள்ளலாமா? எவ்வாறு பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும்?



நம் பாரம்பரிய சமையலில் சைவ மற்றும் அசைவ பதார்த்தங்களில் சுவைக்காக மட்டுமல்லாமல் மருத்துவ பலன்களுக்காகவும் சேர்க்கப்படுகின்றது.


பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் இஞ்சியின் பல அற்புதம் குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.  


இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக்கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் தீருவதுடன் சுறுசுறுப்பு ஏற்படும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீருவதுடன், உடம்பும் இளமையாக இருக்கும்.

பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.  

அளவோடு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகளை நீங்கள் பெற முடியும். அல்சர் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று பின்பு எடுத்துக்கொள்ளவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 340 ஈரவிழிகள் நனைய.

  ஈரவிழிகள் நனைய. மாவீரர்கள் உமைக் காண கல்லறை நோக்கி வருகின்றோம்.. காந்தள் மலர்கள் கரமேந்தி கண்ணீர் துளிகள் கரைமீறி தேச மாந்தர் உமைக் காண தே...