உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 17 ஜனவரி, 2022

mother a47

 தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து


இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனுஸ்-ம் ரஜினியின் மூத்த மகளும் ஆன ஐஸ்வர்யா ஆகியோருக்கு 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு குழந்தைகளும் உண்டு. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தற்பொழுது இருவரும் பிரிய உள்ளதாக சமூக வலைத்தளங்களின் வாயிலாக தெரிவித்துள்ளனர். இது திரையுலகினர் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கூறியதாவது, “18 வருடங்கள் நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம். தற்பொழுது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.


சில ஆண்டுகளுக்கு முன் ரஜினியின் இரண்டாவது மகளுக்கு இதேபோல் விவாகரத்து நடைபெற்று பிறகு வெகு விமர்சியாக தனது இரண்டாவது மகளுக்கு இரண்டாவது திருமணத்தை செய்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த். சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 306 இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை

  இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை  என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Patrick B...