உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 12 ஜனவரி, 2022

mother a32

 தொடரும் மோதல்- வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட பல்கலை மாணவன்!




யாழ்ப்பாணம் பல்கலைக்கழ விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கி இருந்து கல்வி கற்று வரும் விஞ்ஞான பீடம் மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவர்களின் வீட்டிற்குள் புகுந்த நான்காம் வருட மாணவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூன்றாம் வருடத்தினை சேர்ந்த இரு மாணவர்கள் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நான்காம் வருட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அதேவேளை , கடந்த ஒருமாத கால பகுதிக்குள் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவது மோதல் சம்பவம் இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சில வாரங்களுக்கு முன்னர் பகிடிவதை கட்டளையை மீறியதாக முதலாம் வருட மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட சிரேஷ்ட மாணவன் ஒருவர் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...