எங்களிற்கு நீங்கள் வாக்கு செலுத்துங்கோ என நாங்கள் கேட்கவில்லை ஆனால் தமிழீழத்தை பாதுகாருக்கோ துரோகிகளை விரட்டி அடியுங்கோ என வெளிப்படையாகச் சொன்ன கஜேந்திகுமார்.
சிங்கள தலைவர்களின் வழிநடத்தலில் தமிழ் கட்சிகள் மக்களை ஏமாற்றுகின்றது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இந்தியாவின் கைக்குள்ளேயும், சிங்கள தலைவர்களின் வழிநடத்தலிலும் இங்குள்ள தமிழ் கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக யாழில் இன்று இடம்பெற்ற பேரணியின் பின்னர் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
34 வருடங்களுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட ஒற்றை ஆட்சியை இப்போதும் தூக்கிப் பிடிக்கும் 11 பேர் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தியாவின் கைக்குள்ளே நின்று கொண்டு, சிங்கள தலைவர்களின் நிகழ்ச்சி நிரலிலே, மக்களின் ஆணையைப் பெற்று நாடாளுமன்றம் சென்றவர்கள், இன்று என்ன செய்கிறார்கள்.
சீனாவை நாம் இங்கே விட மாட்டோம், அதற்கு நாம் உதவுவோம், நீங்கள் இந்த ஒற்றை ஆட்சிக்கு ஆதரவு கொடுங்கள் எனத் தமிழ் கட்சிகள் இப்போது கையேந்தி நிற்கின்றனர். இந்தியாவுடன் பேரம் பேசியுள்ளனர்.
மக்களே அடுத்த தேர்தலில் நீங்கள் எமக்கு வாக்களிக்க வேண்டாம். ஆனால் 13 ஆம் திருத்தத்துக்கு எதிராகச் செயற்படுங்கள், 13ஐ ஆதரிப்பவர்களை நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும்.அந்த 11 பேர் இப்போது என்ன செய்கிறார்கள்.
மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தருவோம் எனத் தெரிவித்து நாடாளுமன்றம் சென்றவர்கள் இன்று என்ன செய்கிறார்கள். புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவோம் எனத் தெரிவித்துள்ள தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இவர்கள் நன்றாக முண்டு கொடுக்கிறார்கள்.
ஆனால், நாம் விட மாட்டோம். அனைத்து தமிழ் பிரதேசங்களிலும் இந்த போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக