உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 14 ஜனவரி, 2022

mother a37



 யாழில் தொடரும் சிங்கள் கைக்கூலிகளின் அட்டகாசம்


                              


யாழ்.ஓட்டுமடம் - காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று இரவு 9 மணியளவில் நுழைந்த ரவுடி கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் தொியவருகையில்,


ஓட்டுமடம் - காக்கைதீவு வீதியில் ஒரு இளைஞரை மற்றொரு இளைஞர் குழு தாக்குவதை அப்பகுதியால் வாகனத்தில் வந்த ஒருவர் அவதானித்துள்ளார். இதனையடுத்து வாகனத்தை நிறுத்திய அவர் சமாதானமாக பேசி பிரச்சினையை முடித்துவைக்க முயற்சித்துள்ளார்.


அங்கு இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்திய குழு சமாதானம் பேச முயற்சித்தவர் மீதும், அவருடைய வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். இந்நிலையில் சிவில் உடையில் வந்த பொலிஸாரை கண்டதும் குழப்பம் விளைவித்த குழு அங்கிருந்து சென்றுள்ளது.


இந்நிலையில் சமாதானம் பேசுவதற்கு சென்றவரையும், தாக்குதலுக்கு இலக்கான இளைஞனையும் பொலிஸார் அழைத்து சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுமாறு ஆலோசனை வழங்கி நிலையில், இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தனர்.


இந்த நிலையில் சமாதானம் பேச முயற்சித்தவரின் வீட்டிற்குள் வாள்கள் மற்றும் கம்பிகளுடன் நுழைந்த ரவுடிகள் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், கதவுகளை வாளால் வெட்டி அட்டகாசம் புரிந்ததாகவும், வீட்டிலிருந்த ஒரு தொகை பணத்தை ரவுடிகள் எடுத்து சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.


அதேசமயம் வீட்டிற்குள் ரவுடிகள் புகுந்துள்ளதாக பொலிஸாருக்கு தொியப்படுத்தியும் அவர்கள் சம்பவ இடத்திற்கு நீண்டநேரத்தின் பின்னரே அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததாக அறிய முடிகின்றது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...