உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 15 ஜனவரி, 2022

mother a39

 இரண்டாயிரம் ஆண்டுப் பொங்கலடி.!




இரண்டாயிரம் ஆண்டுப் பொங்கலடி

தோன்றட்டும் ஆயிரம் மங்கலங்கள்

மண்ணாற்றல் யாவுமே மேல்வரட்டும்

மாற்றலர் கெய்யிடர் போய்விடட்டும்


ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம்

ஆறுவடை முடிந்து அரிசியாகி

வாடிய வயிறை குளிரவைக்கும்

வளமான தைப்பொங்கல் நாளிதடி


முத்தான நெல்லின் மணிகளோடு

முந்திரிகை வற்றல் சேர்ந்தினிக்கும்

சத்தான பயறும் கலந்தவிந்த

சர்க்கரைப் பொங்கலாய் வாழ்வினிக்கும்


பச்சை அரிசி பால் பொங்கிடட்டும்

பட்டினி துன்பங்கள் நீங்கிடட்டும்

அச்சங்கள் நீங்கிட ஆண்டு இதில்

ஆதார பொங்கலோ பொங்கிடட்டும்


ஓடிடும் காலங்கள் ஓடிடட்டும்

ஒன்றுமில்லா நிலை மாறிடட்டும்

தேடிய செல்வங்கள் சேர்ந்திடட்டும்

தமிழ் தேசம் மகிழ்வினில் ஆடிடட்டும்


ஆண்டுக்கொருமுறை வாற பொங்கல்

அடுத்த ஆண்டினில் வரும் பொழுது

மீண்டும் எம்மை நாங்கள் ஆளுகின்ற

மேன்னையுறு நாளாய் தோன்றிடட்டும்


வீட்டுக்கு வீடு நாம் பொங்கிடலாம்

வெற்றி விழாவாகப் பொங்கிடலாம்

நாட்டுக்கு விடுதலை கிட்டியதால்

நமக்கது சுதந்திரப் பொங்கலடி


ஆக்கம் :-நாவண்ணன்


ஜனவரி 2000 எரிமலை இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...