உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 13 ஜனவரி, 2022

mother a35

 நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 92,264 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!



நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 92,264 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
NSW மாநிலத்தில் முதல்தடவையாக antigen மூலம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி 30,877 பேருக்கு PCR மூலமும் 61,387 பேருக்கு antigen மூலமும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
NSW மாநிலத்தில் antigen மூலம் தொற்று உறுதிசெய்யப்படுபவர்கள் அதனை கட்டாயம் அறிக்கையிட வேண்டுமென்ற கட்டுப்பாடு நேற்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
NSW மாநிலத்தில் இவ்வாண்டு ஆரம்பத்திலிருந்து உறுதிசெய்யப்பட்ட நேர்மறை antigen சோதனைமுடிவுகள் இவ்வாறு அறிக்கையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
NSW மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாதவகையில் ஒரே நாளில் 22 கோவிட் தொடர்பான மரணங்கள் பதிவாகின.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 37,169 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அதேநேரம் 25 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரிய மாநிலத்தில் 953 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 111 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 29 பேர் ventilator-களில் உள்ளனர்.
விக்டோரியாவில் விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் உள்ளரங்கில் நடமாடுவதற்கான தடை வியாழக்கிழமைமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதிகரித்து வரும் கோவிட் பரவலுக்கு மத்தியில் மாணவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக பள்ளிகளுக்குத் திரும்புவது என்பது குறித்த திட்டம் இன்று தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
Omicron திரிபானது கோவிட் தடுப்பூசி போடாதவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.


COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 92,264 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 22 பேர் மரணமடைந்தனர்.30,877 பேருக்கு PCR மூலமும் 61,387 பேருக்கு antigen மூலமும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 37,169 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  25  பேர்  மரணமடைந்தனர். 20,326 பேருக்கு PCR மூலமும் 37,169 பேருக்கு antigen மூலமும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 1,100 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 



NT பிராந்தியத்தில் புதிதாக 550 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


ACT பிராந்தியத்தில் புதிதாக 1020 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 14,914 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  6 பேர் மரணமடைந்தனர். 556 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 26 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...