நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம் சுவர் இருந்தால்தான் சித்திரம் கீறலாம்
தயிருடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.. விஷமாகிடும்! எச்சரிக்கை
தயிரை ஒருசில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் தான் சேதமடையும்.
ஆயுர்வேதத்தில் கூட தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளாக ஒருசில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒருவேளை அப்படி சாப்பிட்டால், அதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இப்போது தயிருடன் எந்த உணவுகளை எல்லாம் சேர்த்து சாப்பிடக்கூடாது, அப்படி சாப்பிட்டால் எம்மாதிரியான பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.
சீஸ்
சீஸை எப்போதும் தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும் மற்றும் உடல்நல குறைவால் அவதிப்பட நேரிடும்.
மீன்
தயிரையும், மீனையும் ஒன்றாக சாப்பிட்டால் அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். அதோடு, இந்த உணவுச் சேர்க்கை அஜீரண கோளாறு, வாய்வு தொல்லை, வயிற்று வலி, வாந்தி போன்ற பல பிரச்சனைகளுக்கும் வழிகுக்கும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடாதீர்கள். ஏனெனில் இவை அஜீரண பிரச்சனைக்கு வழிவகுக்கும். இது தவிர, இந்த உணவு காம்பினேஷன் சில தீவிரமான வயிற்று பிரச்சனையை சந்திக்க வைக்கும்.
சிக்கன்
சிக்கனுடன் தயிரை சேர்த்தால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் பிரச்சனையை உண்டாக்கும்.
வெங்காயம்
பலருக்கும் தயிர் மற்றும் வெங்காயத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் பச்சடி பிடிக்கும். தயிர் மற்றும் வெங்காய காம்பினேஷன் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததல்ல என்று கருதப்படுகிறது.
ஏனெனில் சிலருக்கு வெங்காய பச்சடியானது அலர்ஜி, வாந்தி, வாய்வு தொல்லை, அசிடிட்டி போன்ற பிரச்சனையை உண்டாக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக