அழிவின் ஆரம்பம்.... திடீரென்று வானத்தில் இருந்து விழுந்த இறந்த மீன்கள்! காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
வானத்தில் இருந்து மீன்கள் மழையாகக் கொட்டிய ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டெக்ஸார்கானா என்ற ஊரில் மீன்கள் வானிலிருந்து மழை போல விழுந்திருக்கின்றன.
மீன்கள் எப்படி வானிலிருந்து வரும் என உங்களுக்குச் சந்தேகம் வரும்.
உண்மையில் மீன்கள் வானத்தில் இருப்பவை இல்லைதான். ஏரி அல்லது குளங்களின் மேல் நீர்த்தாரை ஏற்படும் போது அந்த நீர் சுழற்சியில் இந்த மீன்கள் உள்ளிழுக்கப்படுமாம்.
அந்த நேரத்தில் நீர்த்தாரையோடு அதிகமாகக் காற்று அடிக்க ஆரம்பித்து இந்த சுழற்சியில் மீன்கள் பறக்க ஆரம்பிக்கும்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சுழற்சியின் வேகம் குறைந்ததும் மீன்கள் கீழே விழத் தொடங்கும். இப்படி விழுவதே மழை பொழிவது போல் தோன்றும்.
இப்படி நிகழ்வது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு. நீர் சுழலின் வேகம் மீன்களை எடையைத் தூக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் மற்றும் மீன்களும் பறக்கும் அளவிற்கு எடை குறைவாக இருக்க வேண்டும்.
டெக்ஸாஸில் கடந்த வியாழக்கிழமை பெய்த இந்த மீன் மழையைக் கண்ட டெக்ஸாஸ் வாசிகள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். தங்கள் வீடுகளின் அருகில் விழுந்த மீன்களைப் படங்கள் எடுத்து அதை முகநூலில் பகிரத் தொடங்கினர்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது போன்ற இயற்கை சம்பவங்கள் அரிதாக இருந்தாழும் ஆபத்தின் அறிகுறிகளே.... ஆயிரக்கணக்காக மீன்கள் இதனால் உயிரிழந்திருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக