உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 22 ஜனவரி, 2022

mother a62

 சர்வதேச மத்தியஸ்தத்தை உணரத் தொடங்கி விட்டாரா சம்பந்தன்?




ஜனாதிபதியுடனான பேச்சு: ஏமாற தயாரில்லை! சம்பந்தன்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான (Gotabaya Rajapaksa) பேச்சை நாம் குழப்பவும் விரும்பவில்லை. அதேவேளை, ஏமாறவும் தயாரில்லை. சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச்சில் பங்கேற்பதா என்பதை நாம் பரிசீலித்து முடிவெடுப்போம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (R.Sampanthan) தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபயவின் கொள்கை விளக்க உரையைக் காட்டமாக விமர்சித்துள்ள நிலையில், ஜனாதிபதியுடனான பேச்சுக்களில் கூட்டமைப்பு சர்வதேச மத்தியஸ்தத்துடன்தான் பங்கேற்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 18-01-2022 ஆம் திகதி ஆற்றிய கொள்கை விளக்க உரை நாட்டு மக்களை ஏமாற்றும் விதத்திலேயே அமைந்துள்ளது. பல்லாண்டு காலமாகத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு தொடர்பில் அவர் வாயே திறக்கவில்லை.


இந்த நிலையில், அவர் தலைமையிலான அரசு எம்மைப் பேச்சு மேசைக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தால் அதில் நாம் பங்கேற்பதா அல்லது சர்வதேச மத்தியஸ்தத்துடன் பங்கேற்பதா என்று மிகவும் கவனமாகப் பரிசீலித்து முடிவெடுப்போம்.

 

இருப்பினும், இந்தக் கருமம் மிகவும் முக்கியமானது. நாம் எதனையும் குழப்பமும் விரும்பமாட்டோம், அதேவேளை ஏமாறவும் தயாராக இருக்கமாட்டோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 340 ஈரவிழிகள் நனைய.

  ஈரவிழிகள் நனைய. மாவீரர்கள் உமைக் காண கல்லறை நோக்கி வருகின்றோம்.. காந்தள் மலர்கள் கரமேந்தி கண்ணீர் துளிகள் கரைமீறி தேச மாந்தர் உமைக் காண தே...