எழுவோம் எழுவோம் எழுவோம்
ஒன்றாய்த் தமிழர் எழுவோம்.
தலைவன் எழுதிய பொறியை அடைவோம்-எங்கள் தலைவனின் ஆணையில் புலியென எழுவோம்.
போர் போர் இது தமிழீழ மீட்புப் புனிதப்போர்.
தமிழீழத் தாயின் தன் மானம் காக்கும் புனிதப் போர்.
தனித் தமிழீழ அரசை அமைக்கும் போர்.
தன்னிறைவானவன் எனும் உரிமைப்போர்.
ஆணை கொடுக்கின்றான் எங்கள் தலைவன்.
எதிரியின் அங்க அடையாளத்தை அழிக்க
ஆயிரம் ஆயிரம் பகைவன் அழிவான்.
தமிழன் சுதந்திர தமிழீழம் மலர்ந்து மகிழ்வான்……..
கை விலங்குகள் உடையட்டும்.
சிறைக்கதவுகள் தெறிக்கட்டும்.
உரிமை கீதம் விண்ணை மூட்டட்டும்.
வெற்றி சிகரம் ஏறி
கொடியதை நாட்டுவோம்.
ஒன்று பட்டு தமிழர் நாம்
ஈழத்தை உருவாக்குவோம்.
எழுந்திடு தமிழா எழுந்திடு.
விழிகள் திறந்து நடந்திடு.
ஒன்றே எமது நாடு ஒன்றே எமது கொடி
ஒன்றாகி எழுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக