உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

செவ்வாய், 25 ஜனவரி, 2022

mother a71

 துரோகிகளை புகளாரம் சூடும் இணையங்கள் பொறுமை இளந்த தமிழர்கள்


இந்த ஜென்மம் விடுதலையானா என்ன ? சிறையில் இருந்தால் தான் என்ன ? ஏன் இந்த ஆர்பரிப்பு ?


புலிகளின் தயா மாஸ்டர் விடுதலையாகி விட்டார் என்று பரபரப்பு செய்திகளை போட்டு வருகிறது பல தமிழ் இணையங்கள். இதில் தம்மை தமிழ் தேசிய இணையம் என்று கூறும் பல செய்தி இணையங்கள், தயா மாஸ்டர் விடுதலை என்றும். இது சந்தோஷமான செய்தி என்று போடுகிறார்கள். 2009ம் ஆண்டு மே மாதம் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக கூறி ஒரு உடலை இலங்கை அரசு காட்டியது. அதனை அடையாளம் காட்ட அழைக்கப்பட்ட 2 நபர்களில் ஒருவர் கருணா, மற்றைய நபர் தயா மாஸ்டர். இவர் அடையாளம் காட்டி விட்டுச் சென்றிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அதன் பின்னர் சிங்கள நிருபர்களுக்கு ஒரு பேட்டி கொடுத்தார். புலிகள் பெரும் அட்டூழியம் செய்ததாக அவர் கூறிவிட்டு சென்றார். பல வருடங்களாக விடுதலைப் புலிகளோடு இருந்து… அவர்கள் போட்ட சோற்றையும் உண்டு… அதன் உப்பின் ஈரம் காய முன்னரே…

 

சிங்களவர்களின் எலும்பு துண்டுக்கு அலைந்த நபர் தான் இந்த தயா மாஸ்டர். இவர் சிங்கள சிறையில் இருந்தால் என்ன ? விடுதலையானால் நமக்கு என்ன ? ஏன் இந்த பரபரப்பு ? ஐயோ எனக்கு புரியவில்லை. நாம் என்ன அமினிசீயாவில் வாழ்கிறோமா ? கஜனி போல 15 நிமிடங்களில் எல்லாம் மறந்து விடுமா ? அதைப் போல இருக்கிறது இந்த கதை…. இதில் ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பு… ஒத்தி வைக்கப்படாத தீர்ப்பு என்று எல்லாம்… பட்டி மன்றம் நடத்துகிறார்கள். வேறு சிலரோ நீதிபதி இளஞ்செழியனை வாழ்த்துகிறார்கள். உண்மையில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...