தமிழர்களை இலக்கு வைக்கும் கைக்கூலிகள் வெளிப்புத் தான் விடுதலைக்கு முதல் படி
யாழ்ப்பாணத் தமிழன் சுரேஷ் தர்மகுலசிங்கத்தை காரால் மோதிக் கொன்றது யார் ? கறுப்பு நிற காரை…
கனடா – மிசிசாகாவில் கடந்த மாதம் நடந்த விபத்தில் உயிரிழந்த 35 வயதான யாழ்ப்பாண தமிழர் ஒருவரின் குடும்பத்தினரும், பொலிஸாரும் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடந்த குறித்த விபத்தில் சுரேஷ் தர்மகுலசிங்கம் என்னும் இலங்கை தமிழர் உயிரிழந்தார். அவர் 2010 ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்ததாகவும், அவர் லொறி சாரதியாக பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது லொறியை நோக்கிச் தர்மகுலசிங்கம் சென்று கொண்டிருந்தபோது,
மாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. கறுப்பு நிறத்தில் இருப்பதாக நம்பப்படும் அந்த காரின் சாரதி, விபத்துக்குள்ளன சுரேஷ் தர்மகுலசிங்கத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் அந்த இடத்தை விட்டுச் சென்றதாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.தர்மகுலசிங்கம் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சாரதியை அடையாளம் காணும் முயற்சியில் சந்தேகத்தின் பேரில் வாகனம் ஒன்றின் படம் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த காரை இதுவரை கண்டறிய முடியவில்லை. இதனால் பொலிசார் தமிழர்களின் உதவியை நாடியுள்ளார்கள். CCTV கமரா அல்லது ..
சம்பவத்தை நேரில் பார்த்த தமிழர்கள் தயவு செய்து பொலிசாருடன் தொடர்பு கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக