உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 26 ஜனவரி, 2022

mother a74

 தலைவனின் வளியில் தமிழர்கள்


ஒரு தமிழன் இருக்கும் வரை விடுதலை போர் தொடரும் என்ற வளிகாட்டியின் சொல்லிற்கு அமைவாக அனைத்து தலைவர்களும் துரோகியாக மாறியபின்னரும் இரு கட்சிகளின் எதிர்ப் புரட்சி வரலாற்றில் மறக்க முடியதவை தொப்புள்கொடி உறவான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து இருப்பது எமக்கு மிகவும் மன ஆறுதல் அளிகின்றது தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது உன்மை.

.ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்த சட்டத்தை நிராகரிப்போம்! வவுனியாவை வந்தடைந்தது வாகன ஊர்தி (Photos)



ஒற்றையாட்சிக்கு உட்பட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் என்பதை வெளிப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனி இன்று (26.01) இரவு வவுனியாவை வந்தடைந்தது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 6 கட்சிகள் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி இந்தியாவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.


இந்த நிலையில், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரித்து சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் யாழ்ப்பாணம் நல்லூரடியில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.30 இற்கு மாபெரும் பேரணி ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதனை வலுசேர்க்கும் முகமாகத் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளான சமஷ்டி தீர்வை வலியுறுத்தியும், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கக் கோரியும் அலங்கரிக்கப்பட்ட ஊர்திப் பவனி ஒன்று இன்று (26.01) மாங்குளம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.


குறித்த பவனி மல்லாவி, விடத்தல் தீவு, மன்னார் ஆகிய பகுதிகளுக்குச் சென்று இரவு வவுனியாவை வந்தடைந்தது. நாளை (27.01) காலை வவுனியா நகரிலிருந்து புறப்பட்டு முல்லைத்தீவு நோக்கிச் சென்று அங்கிருந்து கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளது


செய் அல்லது செத்து மடி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...