இது எல்லாம் முடிவுக்கு வாற மாதிரி தெரியவில்லை- தற்போது IHU கொரோனா கண்டு பிடிப்பு- இது ஒமிக்ரானை விட மோசமாக பரவும்
வாறது வரட்டும், வந்தால் தப்புவது. இல்லையென்றால் சாவு. அவ்வளவு தான் என்று நினைக்கத் தோன்றுகிறது. காரணம் தற்போது பிரான்ஸ் நாட்டில் திரிவு பட்ட புது கொரோனா வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது ஒமிக்ரானை விட பல மடங்கு மோசமானது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்கு ஐ.எச் .யூ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐ.எச்.யு. என பெயரிடப்பட்ட, பி.1.640.2 மாறுபாடு, மெடிட்டரேனி இன்ஃபெக்ஷன் நிறுவனத்தில் உள்ள கல்வியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 46 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஓமிக்ரோனை விடவும் இது தடுப்பூசிகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்டது..
புதிய மாறுபாட்டின் குறைந்தது 12 தொற்றுகள் மார்செய்ல்ஸ் அருகே பதிவாகியுள்ளன. மேலும் அவை ஆபிரிக்க நாடான கேமரூனுக்குப் பயணம் செய்யதவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஓமிக்ரோன் மாறுபாடு இன்னும் ஆதிக்கம் செலுத்தும் விகாரமாக மாறியுள்ள நிலையில், ஐ.எச்.யு. மாறுபாட்டின் அச்சுறுத்தல் தற்போது தலைதூக்கியுள்ளது.இது முதன்முதலில் டிசம்பர் 10ஆம் திகதி கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், உலக சுகாதார அமைப்பின் விசாரணையின் கீழ் இது ஒரு மாறுபாடு என்று பெயரிடப்படவில்லை. அத்துடன் இந்த புதிய மாறுபாடு, செப்டம்பரில் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தோன்றியதாகக் கருதப்படும் பி.1.640க்கு மரபணு ரீதியாக வேறுபட்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக