பைடனை நட்டாற்றில் விட்ட நேட்டோ: பயத்தில் சமாதான பேச்சுக்கு ரஷ்யாவை அழைத்துள்ளார்கள்
ரஷ்யா மீது உள்ள பெரும் அச்சம் காரணமாக, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் புட்டினை வீடியோ காலில் தொடர்பு கொண்டு சமாதான பேச்சுக்கு வருமாறு அழைத்துள்ளார்கள். இந்த வீடியோ காலில் இணைந்த புட்டின், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் உக்கிரைன் ஆகிய நாடுகளுடன் தான் பேச ரெடி என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ஒரு தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்படி ஒரு கட்டத்திற்கு ரஷ்ய அதிபர் புட்டின் சென்றிருக்கவே மாட்டார் என்பது தான் உண்மை. இலகுவாக உக்கிரைன் நாட்டை பிடித்து விடலாம். வழமை போல நேட்டோ நாடுகள் இதில் தலையிடாது என்று புட்டின் கணக்கு ஒன்றை போட்டு இருந்தார். ஆனால் வழமைக்கு மாறாக…
அமெரிக்கா கடும் எதிர்ப்பை காட்டியதோடு தனது படைகளை உக்கிரைக்கு உதவியாக அனுப்ப திட்டம் தீட்டியது. இது இவ்வாறு இருக்க பிரித்தானிய அதி நவீன ஆயுதங்களை கொடுத்து முன்னேறும் ரஷ்ய டாங்கிகளை அழிக்க ஏதுவாக துணை புரிந்தது. இன் நிலையில் போர் மூண்டால், ரஷ்யா தோற்றுப் போகும் நிலை காணப்பட்டது. சற்று சறுக்கினால் கூட, ரஷ்ய படைகள் தொடர்பாக படு கேவலமான கருத்துகள் வெளியாகும். இன் நிலையில் தான் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி குட்டையை குழப்பி உள்ளது. இந்த 2 நாடுகளும் புட்டினை, பேச்சுவார்த்தைக்கு அழைக்க. வேறு வழி இன்றி தான் பேசத் தயார் என்று கூறி தப்பி விட்டது ரஷ்யா. அனைத்து நேட்டோ நாடுகளும் ஒன்றாக இணைந்து புட்டினை எதிர்த்திருந்தால்…
ரஷ்யா என்றோ பின் வாங்கி இருக்கும் என்பதே உண்மை. ஆனால் ஜேர்மனி நினைக்கிறது ரஷ்யா தனது நாட்டுக்கு தரும் சமையல் எரி வாயுவை நிறுத்தும் என்று. ரஷ்யாவின் மிக முக்கிய வருமானமே எரிவாயு விற்பனை தான். அதனை அது இழக்குமாக இருந்தால். நாட்டின் வருமாணத்திற்கே பெரும் அடி விழும். அதனால் ரஷ்யா எரி வாயு விற்பனையை எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தாது. அதன் விலையை சற்று அதிகரித்து பயத்தை ஏற்ப்படுத்தி இருக்கும் அவ்வளவு தான். ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஏன் இந்த அளவு ரஷ்யாவை பார்த்து கிலி கொள்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக