இரவில் நடிகைகளுடன் கும்மாளம்.. விவாகரத்துக்கு இதுதான் காரணமா? வீட்டை விட்டு வெளியேறிய ரஜினிகாந்த்
நடிகர் தனுஷும் ஐஸ்வரியா ரஜினிகாந்தும் விவகாரத்து செய்யப்போவதாக இருவரும் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் படிக்கும் போதே தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தனுஷ் தொடர்ந்து அவர் நடித்த மூன்று படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் பட்டியலில் இடம் பெற்று, நடிகர் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் தனுஷ் திருமணமான தொடக்கத்தில் எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருந்து வந்தார்.
இவர் நடித்து வெளியான ஆடுகளம் படம் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது, இந்த படத்துக்கு தனுஷ் தேசிய விருது பெற்றார்.
இதற்கு பின்பு அடுத்த கட்டத்துக்கு போன நடிகர் தனுஷ் அவர் நடிக்கும் திரைப்படத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்துக்கு வந்தார்.
இதனை தொடர்ந்து சில படங்கள் நடித்த தனுஷ் அவருடைய மனைவி இயக்கத்தில் 3 படத்தில் நடித்த போது சுருதிஹாசன் உடன் கிசு கிசுக்கப்பட்டு ரஜினிகாந்த் குடும்பத்தில் பெரும் சர்ச்சையாகி பின் சமரசமானதாக பரபரப்பாக பேசப்பட்டது.
இதன் பின்பு தொடர்ந்து நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்கி வந்த தனுஷ், நடிகை அமலாபால், தொகுப்பாளினி டிடி ஆகியோர் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என பரபரப்பாக பேசப்பட்டது.
இதில் நடிகை அமலாபால் விவாகரத்துக்கு பின் தொடர்ந்து பல நடிகைகளுடன் கிசு கிசுக்கபட்டார் தனுஷ், மேலும் இரவு பார்ட்டிகளில் அவர் நடிகைகளுடன் பங்கு பெரும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் தனுஷ் விவகாரம் முடிவே இல்லாமல் தொடர்ந்து சர்ச்சையாகி வந்த நிலையில், பலமுறை தனுஷ் மனைவி எச்சரித்தும், நான் அபப்டியெல்லாம் இல்லை, இனிமேல் இதுமாதிரி பிரச்சனை வராது என சமாதானம் செய்து விட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி வந்துள்ளார்.
இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் ஐஸ்வர்யா அதிரடி முடிவுகளை எடுத்து தனுஷ் இனி தப்பிக்க முடியாதவாறு அதிரடியாக செயல்பட்டார்.
அதில் இனி சென்னை தவிர்த்து வெளியில் எங்கே படப்பிடிப்புக்கு சென்றாலும் அவருடனே கூட செல்வது, இரவு பார்ட்டிகளுக்கு கணவன் உடன் செல்வது, குறிப்பாக வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளில் அவரும் கலந்து கொள்வது என முடிவு செய்து இதற்கு ஒப்பு கொள்ளவில்லை என்றால் விவாகரத்து செய்துவிடுவதாக தனுஷை எச்சரித்து, அதன்படி சமீப காலமாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இன்று காலை முதல் ரஜினிகாந்த் போயல்கார்டன் வீட்டில் இல்லை என்று கூறப்பட்டது. அனைவரும் அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிப்பாரோ என்ற கோணத்தில் முனுமுனுத்து வந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்து விஷயம் அதில் மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதன் காரணமாக தான் நடிகர் ரஜினி நிம்மதி தேடி எங்கேனும் சென்றிருப்பாரோ என்று கேள்வி எழுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக