உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 21 ஜனவரி, 2022

mother a58

 கிளிநொச்சியில் நள்ளிரவுவேளை இடம்பெற்ற துயரம் - தாயும் மகளும் கருகிய நிலையில் சடலமாக மீட்பு


கிளிநொச்சி தருமபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு (20 01.2022) தாயும் அவரது 17 வயது மகளும் தீயில் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


இச் சம்பவம் தொடர்பாக தருமபுரம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இச் சம்பவம் நடைபெற்றவேளை குடும்பசுமை காரணமாக தந்தையும் மகனும் வெளிமாவட்டத்தில் கூலிவேலைக்கு சென்றிருந்தனர்.


47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி (07பிள்ளைகளின் தாயார்), அவரது மகள் 17 வயதுடைய லக்சிகா ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டவர்களாவர்.


இச்சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிரவிசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 309 இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் உடலங்களில் காணப்பட்ட நகைகளை இராணுவம் திருடியதாக களத்தில் இருந்த வயோதிப பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

  இறந்து கிடந்த உடல்களில்இருந்த நகைகளை திருடிய இராணுவம் : பரபரப்பு குற்றச்சாட்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் ...