கனடாவில் தமிழர் ஒருவரிற்கு கிடைத்த பல மில்லியன் பணம்! பெரும் மகிழ்ச்சியில் குடும்பம்
கனடாவில் 30 ஆண்டுகளாக லொட்டரி விளையாட்டில் ஈடுபட்டு வந்த தமிழருக்கு அவர் கனவு நினைவாகும் வகையில் மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ள நிலையில் பல கோடிகள் அவர் கைக்கு வந்து சேர்ந்துள்ளது. ஒன்றாறியோவின் பிராம்டனை சேர்ந்தவர் மனோஹரன் பொன்னுதுரை (54).
இவர் 30 ஆண்டுகளாக லொட்டரி விளையாடி வருகிறார். என்றாவது ஒருநாள் மிகப்பெரிய பரிசை கொடுக்கும் அதிர்ஷ்ட சீட்டு தனக்கு வரும் என கனவில் இருந்த பொன்னுதுரைக்கு தற்போது கனவு நினைவாகியுள்ளது.
அதன்படி அவருக்கு லொட்டோ மேக்ஸ் ஜாக்பாட்டில் $70 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. சிறிய உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வரும் பொன்னுதுரை தற்போது பல கோடிகளுக்கு அதிபதியான பின்னரும் தொழில் மற்றும் பணியில் இருந்து ஓய்வுபெற போவதில்லை என கூறி ஆச்சரியம் அளிக்கிறார்.
சமீபத்தில் தனக்கு விழுந்த ஜாக்பாட்டின் காசோலையை ரொறன்ரோவில் உள்ள OLG பரிசு மையத்தில் பெற்று கொண்ட பொன்னுதுரை கூறுகையில், ஒரு நாள் ‘பெரிய’ வெற்றியைப் பெற வேண்டும் என்று பெரும் கனவை கொண்டிருந்தேன், அது நினைவாகியுள்ளது.
முதலில் லொட்டோ டிக்கெட்டை பரிசோதித்து பார்த்த போது வெற்றியை அடைந்த டிக்கெட்டின் 4 எண்கள் என் டிக்கெட் 4 எண்களுடன் ஒத்து போனது. இதையடுத்து என் உடல் நடுங்க ஆரம்பத்ததால் என்னால் தொடர முடியவில்லை, பின்னர் மீதமுள்ள எண்களைப் படிக்க உதவுமாறு என் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்தேன்.
அதில் ஒவ்வொரு எண்ணும் பொருந்தும்போது, என் இதயம் வேகமாக துடித்தது. ஒரு கட்டத்தில் பரிசு உறுதியானதை உணர்ந்து, நான் வெற்றி பெற்றேன் என எனக்கு நானே சொல்லி கொண்டேன். என் நிறுவனம் மற்றும் என்னை நம்பி பல பணியாளர்கள் உள்ளனர், அதனால் தொழிலை விடும் திட்டமில்லை. எனது குடும்பத்தின் எதிர்காலம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நாங்கள் எதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாலும், அதை நாங்கள் குடும்பமாக செய்வோம், அதுதான் எனக்கு மிக முக்கியமானது என கூறியுள்ளார். பரிசு பணத்தை கொண்டு முதலில் புதிய வீட்டை கட்டவுள்ளார் பொன்னுதுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக