தினமும் காலையில் இரண்டு முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
முட்டையில் 13 வெவ்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இதனால் எந்த சந்தேகமும் இல்லாமல் காலை உணவாக முட்டையை சாப்பிடலாம்.
அவ்வாறு சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் முழுமையாக உணர வைப்பதோடு ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும் முட்டையில் உள்ள நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்..
முட்டையின் மஞ்சள் கரு நல்ல கண்பார்வையை பராமரிக்க உதவுகிறது. மஞ்சள் கருவில் அதிக அளவு இருக்கும் Lutein மற்றும் zeaxanthin உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்புரை மற்றும் கண் சிதைவு அபாயத்தை குறைக்க உதவும்.
நம் மூளை செயல்பாட்டை மேம்படுத்துவது, உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது, குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவது என நமக்கு தேவையான அனைத்தையும் முட்டை தருகிறது. மேலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் விளங்குகிறது.
உடலுக்குத் தேவையான 13 வெவ்வேறு வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் முட்டையில் உள்ளன. முட்டைகளில் அடங்கி இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மேம்பட்ட உடல் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவியாக இருக்கிறது.
இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும் HDL எனப்படும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்துகிறது. 6 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு 2 முட்டைகள் வீதம் சாப்பிட்டு வந்தால் HDL அளவை 10%அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக