உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

செவ்வாய், 11 ஜனவரி, 2022

mother a30

 மன்னாரில் பயங்கர விபத்து: அடுத்தடுத்து வாகனங்களை மோதித்தள்ளிய பேருந்து!


 மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி பொது விளையாட்டு மைதான சந்தியில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11-01-2022) மாலை மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளது.


மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பிரதேச செயலகத்திற்கு சொந்தமான வாகனம், டிப்பர், முச்சக்கர வண்டி, துவிச்சக்கர வண்டி என வரிசையில் சமிஞ்சைக்காக காத்திருந்த வாகனங்களை பேருந்து மோதியுள்ளது.


இச்சம்பவத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியில் சமிஞ்சைக்காக காத்திருந்த ஏனைய வாகனங்களை மோதி தள்ளியதில் முச்சக்கர வண்டி முற்று முழுதாக சேதமடைந்ததுடன் ஏனைய வாகன சாரதிகள் காயமடைந்தனர்.


இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஒன்றின் சாரதி அருகில் இருந்த வீதி ஒன்றில் பேருந்தை நிறுத்தி விட்டு தப்பித்து சென்றுள்ளார்.





மேலும் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 305கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து   2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூ...