உங்களுக்கு இப்படியான குறுஞ்செய்திகள் வந்தால் அழித்துவிடுங்கள்!
இணையத்திருடர்கள் நமது தொலைபேசிகள் மற்றும் கணினிகளுக்குள் ஊடுருவுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வதால், இதுதொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெவ்வேறு வகையில் கைபேசி குறுஞ்செய்தி ஊடாக மக்களைக் குறிவைக்கும் மோசடிக்காரர்கள், அண்மைக்காலமாக தமது செயற்பாட்டை பரந்தளவில் முடுக்கிவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக உங்களுக்கு பார்சல் ஒன்று வந்திருக்கிறது, அல்லது உங்களது முகவரியைக் கண்டுபிடிக்க முடியாததால் உங்களது பார்சல் காத்துக்கொண்டிருக்கிறது, உங்களது வீடியோ ஒன்று இந்த இணைப்பில் இருக்கிறது என்பதாக பல கோணங்களில் மோசடிக்காரர்கள் குறுஞ்செய்திகளை மக்களுக்கு அனுப்புகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக