யாழில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்
யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த உத்தியோகஸ்தரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். கீரிமலை - கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ரமணன் (வயது-47) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது குடும்பத்தினர் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சென்றிருந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தனிமையில் இருந்ததாக பொலிஸார் கூறினர்.
இந்நிலையில் அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக