தமிழர்களின் பாதுகாப்பு கேழ்விக்குறி ஐக்கி நாடுகளின் அமைதிபடையை தமிழர் தாயகமான வட கிழக்கிற்கு அனுப்புமாறு கோரிமாபெரும் ஆற்பாட்டம் நடத்துமாறு ஆலோசனை.
கிளிநொச்சியில் 14 வயது சிறுமி மாயம்! தொலைப்பேசியில் வந்த மிரட்டல்
கிளிநொச்சியில் 14 வயதான சிறுமி ஒருவர் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பழைய கச்சேரி வீதி, கிளி நகர் பகுதியில் வசிக்கும் செந்தூரன் பகலினி என்ற 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
மேலும் குறித்த சிறுமி கடந்த 17ஆம் திகதியிலிருந்து காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுமி தொடர்பாக பெற்றோரிடம் பொலிஸார் வினவியபோது, கடந்த 17 ஆம் திகதி மகளைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர், தங்களுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், காணாமல் போயுள்ள சிறுமி தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் 0774188975 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸாரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக