இன்றுகாலை இடம்பெற்ற சம்பவம்; இளம் தம்பதிகளுக்கு நேர்ந்த பெரும் துயரம்
42 minutes ago
இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் தம்பதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து பண்டாரகம - கெஸ்பேவ வீதியில் வெல்மில்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆணும், கண்டி பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பெண்ணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரும் கெஸ்பேவயில் இருந்து பண்டாரகம நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அதில் இருவரும் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக