உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 27 ஜனவரி, 2022

mother a75

 இதற்கான உரிமை இலங்கை அரசுக்கு இல்லை! ஓ.பன்னீர்செல்வம் கண்டிப்பு




தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 105 படகுகளை ஏலத்தில் விட விளம்பரப்படுத்தியிருக்கும் இலங்கை அரசாங்கத்தை கண்டிப்பதாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் (O. Panneerselvam) அறிவித்துள்ளார்.


இதேவேளை, இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விடும் நடவடிக்கையை இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் இணைந்து தடுக்க வேண்டும் என அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கோரியுள்ளது.


மேலும், இலங்கை அரசின் இந்த செயல் இயற்கை நியதிக்கு எதிரானது எனவும் தமிழக மீனவர்களின் பெயர்களில் உள்ள படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விட வேண்டாம் என முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) ஊடகவியலாளர்கள் இன்று வினவினர்.


இதன்போது, அவர் தெரிவித்த விடயம், அவை பழுதடைந்த படகுகள், இட நெருக்கடி, சுகாதார பிரச்சினை காரணமாக அதனை ஏலம் விட முயற்சிப்பதாகக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...