ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மேலும் 48 பேர் மரணம்!
கொரோனா வைரஸ் குறித்து பெப்ரவரி மாதம் 11ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.
NSW, விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் கோவிட் தொடர்பிலான 48 இறப்புகள் ஒரே நாளில் பதிவாகியுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 8,950 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 பேர் மரணமடைந்தனர். NSW மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,795இல் இருந்து 1,716 ஆகக் குறைந்துள்ளது. இவர்களில் 108 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 8,521 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13 பேர் மரணமடைந்தனர். 553 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 82 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 5,977 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர் மரணமடைந்தனர். 584 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 45 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 552 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 16 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில், புதிதாக 1445 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர். 210 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 16 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக