சூரியகாந்தி விதையை பாக்கெட்டில் போடு- நீ இறக்கும் போது அது உக்கிரைன் மண்ணில் மலரும்- ரஷ்யாவை திட்டிய வீரப் பெண் !
ரஷ்ய ராணுவம் உக்கிரைன் நாட்டின் பல எல்லைக் கிராமங்களை, கைப்பற்றியுள்ள நிலையில். சிலர் தமது கிராமங்களை விட்டு வெளியேறவே இல்லை. அதிலும் ஒரு வயதான அம்மா ஒருவர் ரஷ்ய ராணுவ வீரரை பார்த்து , உன் பாக்கெட்டில் சூரிய காந்தி விதையை வைத்திரு என்று சொல்ல, அவரும் ஏன் என்று கேட்டுள்ளார். அந்த அம்மா கூறியுள்ளார், நீ உக்கிரைன் மண்ணில் இறக்கும் போது விதை உக்கிரைன் மண்ணில் மலரும் என்று. அந்த அளவு வீரம் பொருந்திய உக்கிரைன் தாய் ஒருவரை தான் இங்கே பார்கிறீர்கள். என்ன சொல்வது என்று தெரியாமல் திக்கு தடுமாறி நின்றார் ரஷ்ய ராணுவ சிப்பாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக