பயங்கரவாத சட்டம்”…. தடை செய்ய ….. வலியுறுத்திய மனித உரிமை ஆணையம் …..
இலங்கையில் கடந்த 1979ஆம் ஆண்டு முதலே பயங்கரவாத தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஒருவர் மேல் சந்தேகம் வந்தால் அவரை விசாரணை இன்றியே கைது செய்ய திட்டம் வழிவகுக்கிறது. இதனால் பல அப்பாவிகள் இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக இந்த தடை சட்டத்தை நீக்க வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் முஸ்லிம்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் தற்போது இதுதொடர்பாக கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என இலங்கை அரசுக்கு அந்த நாட்டு மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதுபற்றி ஆணையத்தின் தலைவரான நீதிபதி ரோகிணி மாரசிங்க் கூறுகையில், இச்சட்டத்தின் மூலம் அரசியல்- சித்தாந்தம் அல்லது மத காரணத்திற்கான அப்பாவி பொது மக்களை குறி வைப்பது என்பது வெளிப்படை எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் போன்றவை இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என இலங்கை அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக