இலங்கை தமிழர்களை அளிப்பதற்கான மந்திர ஆலோசனை நடத்தப்பட்டது கதைப்பது வேறவிடடம் வெளியிடுவது வேறே 70 வருடமாக தொடரும் பொய்கள்,
இலங்கை தமிழர்களுக்கான தீர்வாக அதிகாரப்பரவல் மிகவும் முக்கியமானது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸூடனான சந்திப்பின்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களிற்கு சமத்துவம் நீதி சமாதானம் கௌரவம் ஆகியவற்றினை உறுதிப்படுத்துவதே இலங்கையின் நலனிற்கு உகந்த விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார் இதற்கு அதிகாரப்பரவல் மிக முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையின் மூலம் கையாளவும், வன்முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் நீண்ட காலமாக ஒருமித்த கருத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மீன்பிடித்துறைக்கான கூட்டுப் பணிக்குழுவில் தொடங்கி இருதரப்பு வழிமுறைகள் முன்கூட்டியே சந்திக்க வேண்டும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதேவேளை இந்த விஜயத்தின் போது, இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ்,இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோரையும் சந்தித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக