உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

mother a88

 புதுப் புது பெயர்களை வைத்து ஊசி மருந்துகளை தொடர்ந்து விற்பதற்கான திட்டமா?



உருமாற்றம் அடைந்த ஒமிக்ரோன் வைரஸ்! ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்


 

 



ஒமிக்ரோன் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியா, பிரித்தானியா, டென்மார்க் உள்ளிட்ட 35இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த மாறுபாடு ஒமிக்ரோன் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவிட் பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கருதி வரும் நிலையில், அந்த எண்ணத்தை புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் கேள்விக்குறியாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகையில், 


ஒமிக்ரோன் வைரஸ் உருவாக்கியுள்ள நோய் எதிர்ப்பு சக்தி புதிய மாறுபாடு ஏற்படுத்தப்போகும் பாதிப்பை தடுக்க முடியாது என தெரிய வந்துள்ளது.


பி.ஏ.2. மாறுபாடு ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 39 சதவீதம் அதிகம் நோய் பரப்பும் தன்மையை கொண்டிருப்பர். தடுப்பூசி செலுத்தியவர்களை விட தடுப்பூசி செலுத்தாதவர்களை தான் இந்த புதிய மாறுபாடு அதிகம் பாதிக்கும். பூஸ்டர் தடுப்பூசிகளை நாம் தொடர்ந்து செலுத்துவது மட்டுமே பயன் தரும். இருப்பினும் தற்போது கிடைத்துள்ள தரவுகளை வைத்து நாம் முடிவுக்கு வந்துவிட முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 359தமிழ் தலைவர்கள் பிரித்தானிய தூதரகத்தின் மூடிய அறைக்குள் நடத்திய சந்திப்பு :உன்மையை துணிந்து சொன்ன கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  கூறப்பட்ட இரகசியம் அம்பலம்இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் பிரித்தானியா எப்போதும் துணை நிற்கும்   என பி...