உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 28 பிப்ரவரி, 2022

mother a143

 


பிணக் குவியல் இருந்து மீட்கப்பட்ட பெண்: ரஷ்ய அதிபர் புதின் தொடர்பில் சுவாரஸ்ய தகவல்

10SHARES
  •  
  •  
  •  
Download Now & Watch Free

இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.

தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் சென்றடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார்.

டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.

அப்போது ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார். முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த ஷூ போல் இருந்தது. உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பிச் வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார். அது அவரது மனைவியேதான். அதிர்ச்சியடைந்தார்.

பொதுக் கல்லறையில் மனைவியைப் புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகவும் கூறி உடலைத் தருமாறு அந்த வீரர் வேண்டிய  நிலையில் உரிய அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும்போது மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப் பார்த்து வீரர் அதிர்ச்சியடைந்தார்.

உடனே மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் உயிர் பிழைத்தார். இந்த விபத்து நடந்து பல வருடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி கர்ப்பமுற்றாள்.

பின்னர் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தையின் பெயர்தான் விளாடிமிர் புதின். தற்போது ரஷ்யாவின் அதிபராக இருக்கும் விளாடிமிர் புதின் தான் அந்த குழந்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 313யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு  செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்க...