உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 2 பிப்ரவரி, 2022

mother a89

 வாழைப்பழத்தை இந்த நேரத்தில் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?



வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள் குறித்து உணவு முறை நிபுணர் வைத்தியர் ஒருவர் அளித்த கருத்துப்படி, நாளாந்தம் 1 வாழைப்பழம் சாப்பிடுவது பல நோய்களில் இருந்து உங்களை காப்பாற்றும்.


இதேவேளை, வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது நமது தசைகளில் ஏற்படும் கிராம்பை தடுக்கும்.


வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் உள்ளது, இது நம் உடலை சுருசுருப்பாக வைத்திருக்க உதவும். 


மேலும் வாழைப்பழத்தை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சாப்பிட்டு பாருங்கள் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.


வாழைப்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் :


வாழைப்பழத்தில் இருக்கும் சத்துக்களைப் பார்த்தால், வைட்டமின்-A, வைட்டமின்-B மற்றும் மெக்னீசியம் தவிர, வைட்டமின்-C  பொட்டாசியம் மற்றும் வைட்டமின்-B6, தயாமின், ரிபோஃப்ளேவின் போன்றவை உள்ளன. வாழைப்பழத்தில் 64.3 சதவீதம் தண்ணீர், 1.3 சதவீதம் புரதம், 24.7 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை நாம் உடலுக்கு மிகவும் அவசியம்.


வாழைப்பழம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:


வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து உடலின் வலிமையை அதிகரிக்கிறது.

வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபான் அமினோ அமிலம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

உடற்பயிற்சிக்கு 30 நிமிடங்களுக்கு முன் வாழைப்பழம் சாப்பிடுங்கள். இது உடற்பயிற்சிகளுக்கு ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும்.

மாதவிடாய் காலங்களில் எரிச்சல் மற்றும் வலியைக் குறைக்க வாழைப்பழம் உதவியாக இருக்கும்.

வாழைப்பழத்தில் போதுமான இரும்புச்சத்து உள்ளது, இது இரத்த சோகை அபாயத்தைக் குறைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 302 பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு

  பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு   பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் நாளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக...