தனுஷை பிரிந்த நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ‘தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில்தான் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் 16 வருடகால மணவாழ்கையிலிருந்து பிரிவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக