உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

mother a 123

 தாயகப் பகுதியில் திட்டமிட்ட விவத்துக்களா ? கவலையில் தமிழர்கள்



பேருந்திற்காக காத்திருந்த இளம் பெண்ணின் உயிரை பறித்த கோர விபத்து (PHOTOS)


வவுனியா -  கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.


கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த தந்தையும், மகளும் அவ்வீதியால் வந்து கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அதில் ஏற முற்பட்டுள்ளனர்.


இதன்போது வவுனியாவில் இருந்து யாழ்.நோக்கி சென்றுகொண்டிருந்த பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து குறித்த இருவரையும் மோதியுள்ளது.


விபத்தில் பேருந்திற்காக காத்திருந்த சிவசுப்பிரமணியம் சிந்துயா வயது 33 என்ற பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.


அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பாரவூர்த்தி அதிக வேகமாக வந்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பாக கனகராஜன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...