வெறும் வயிற்றில் இந்த உணவை சாப்பிட்டால் போதும்! 2 நிமிடத்தில் நடக்கும் அதிசயம்;
அன்றாடம் காலை எழுந்தவுடன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்தப் பொருட்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுப் பொருட்கள் சற்று விலை உயர்ந்ததாக இருந்தாலும் இதன் எண்ணிக்கை குறைவாக தான் நாம் எடுத்துக் கொள்ளப் போகிறோம்.
மேலும், இதனை சமைக்க வேண்டிய அவசியம் கூட நமக்கு ஏற்படுவது இல்லை. இதனால் நிறையவே நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்தும் கூடிய உணவு வகை என்று தான் கூற வேண்டும்.
காலையில், இரண்டு முந்திரி, நான்கைந்து பாதாம் பருப்புகள், இரண்டு டீஸ்பூன் அளவிற்கு வேர்க்கடலை, ஒரு சில்லு தேங்காய் பத்தை, இதற்கு தேவையான இனிப்பு கொடுக்கக் கூடிய வகையில் கொஞ்சமாக பனைவெல்லம் இவற்றில் முந்திரி, பாதாம் மற்றும் வேர்க்கடலை போன்றவற்றை முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் காலையில் எழுந்ததும் வடிகட்டி தோலுரித்து பனை வெல்லம் மற்றும் தேங்காயுடன் சேர்த்து அப்படியே சாப்பிட்டாலும் நன்றாகத் தான் இருக்கும்.
மேலும், காலையில் கொஞ்சமாவது ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் மதிய மற்றும் இரவு உணவுகளை உங்களுக்கு பிடித்தது போல சாதாரணமாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக