நான் போரை வெறுக்கிறேன்! உக்ரைன் - ரஷ்ய மோதல் குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கம்
உக்ரைன் - ரஷ்ய மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று அதிகாலையில் உக்ரைன் மீது வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி போரை தொடங்கியிருந்தது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் இதுவரை இடம்பெற்ற மோதலில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
கடந்த இரண்டு தினங்களாக உக்ரைன் - ரஷ்ய மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், போரினை முடிவிற்கு கொண்டு வருமாறு உலக நாடுகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள்,பிரபலங்கள் போன்றோர் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இது குறித்து ட்விட்டர் பதிவொன்றினை இட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
"நான் போரை வெறுக்கிறேன். அது உலகத்தின் விலா எலும்புகளையும் பாதிக்கும். கீவ் நகரத்தில் விழுந்த குண்டு கீரிப்பட்டியின் கீரைக்காரி கூடை உடைக்கும். ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும். ரஷ்யா மீது ஜி7 நாடுகளின் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். நான் போரை வெறுக்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்
.தனது சொந்தஇனம் அழியும் போதும் அவன் கண்ணீர் விட்டு எழுதினான். அயல் நாட்டுக்காரன் அழியும் போதும் அவனின் பேனா எழுதியது ஏனெனியில் அவன் ஒரு கவிஞன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக