#காதலர்தினமாம்_ஆதலால்_காதல்செய்வோம்_வாரீர்....!
இளைய சமுதாய தமிழ்பிள்ளைகள் உண்மையாக உணர்வுபூர்வமாக காதலியுங்கள் காதலித்தவரை கரம் பிடியுங்கள் வாழ்த்துக்கள்.....
ஒரு ஆண் பெண்ணையும் ஒருபெண் ஆணையும் காதலிப்பது வழமையான ஒன்றுதான்.ஆனால் தன்மான தமிழர் நமக்கு இந் சராசரி காதலையும் கடந்து மற்றொரு உன்னதமான,உயர்வான,எல்லாவற்றிக்கும் மேலான,மேன்மையான,புனிதமான காதல் இருத்தல் வேண்டும் அது #தாயகமண்_மீதானகாதல்....
இருசக்கர உந்துருளியில் பயணிக்கும்போது தலைக்கவசம் அவசியமென்று வாகனம் ஓடும் போது அதை அணிவது கட்டாயமாக்கபட்டிருக்கின்றது.அதற்கு காரணம் உந்துருளியில் பயணிக்கும் போது விபத்து நிகழ்ந்துவிட்டால் தலையை மட்டும் காப்பாற்றிக்கொண்டு உடலின் மற்ற உடலுறுப்புகள் பதிப்படைந்தால் பரவாயில்லை தலையை மட்டும் காப்பாற்றிக்கொண்டால் போதும் என்பதல்ல அதன் அர்த்தம். விபத்தில் உடலின் மற்ற பாகங்கள் பாதிப்படைந்தாலும் உயிர் பிழைப்பதற்கு வாய்பிருக்கின்றது ஆனால் தலையில் பலமாக அடிபட்டுவிட்டால் உயிர் பிழைப்பதென்பது மிக மிக அரிது.எனவே தலைக்கு தலைக்கவசம் அவசியம்.தன்மான தமிழர்கு அந்த தலைதான் தமிழீழம் அதை காக்கும் கவசம்தான் எங்கள் வரியுடை வேந்தனும் அவர் வார்தெடுத்த வரிபுலிகூட்டமும. தலைக்கவசம் தலையை மட்டும்தான் பாதுகாக்கின்றது ஆனால் தன்மானத் தமிழர் நாமோ தலையையும் பாதுகாத்து தலைக்கவசத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கின்றோம் எனவே...
தாயகத்தை காதலியுங்கள்...
தமிழீழத்தை காதலியுங்கள்..
மாவீரரை காதலியுங்கள்...
அவர்தம் இலட்சியத்தை காதலியுங்கள்...
மாவீரர் நோக்கத்தை காதலியுங்கள்...
மாவீரர் தியாகத்தை காதலியுங்கள்...
வெடிசுமந்த வேங்கையின் வேட்கயினை காதலியுங்கள்...
இமாலய வெற்றிகளை குவித்த அவர்கள் மனஉறுதியை காதலியுங்கள்...
உண்மைகாதலின் உன்னதமாக விளங்கும் எங்கள் தாயான தலைவரின் துணைவியை காதலியுங்கள்...
பகட்டான வாழ்க்கை வாழ வாய்ப்புகள் இருந்தும் அதை அத்தனையும் துறந்து தலைவருக்கு துணையாக நின்ற அந்த உண்மை காதலை காதலியுங்கள்...
தாயக காதலையும் தலைவர்மீதான காதலையும் தன்னிரு கண்களாக போற்றும் அந்த வீரத் தமிழச்சியின் மனோதிடத்தை காதலியுங்கள்...
தலைவரை காதலியுங்கள்...
அவர்தம் இலட்சியத்தை காதலியுங்கள்...
அவர்தம் கொள்கைகளை காதலியுங்கள்...
அவர்தம் உறுதியை காதலியுங்கள்...
அவர்தம் விடாமுயற்ச்சியை காதலியுங்கள்...
அவர்தம் சிந்தனைகளை காதலியுங்கள்...
அவர்தம் மனோதிடத்தை காதலியுங்கள்...
அவர்தம் தமிழீழ உறுதியை காதலியுங்கள்...
அவர் தமிழ் மக்களின்மேல் வைத்திருக்கும் பாசத்தை காதலியுங்கள்...
அவரின் தமிழீழ நேசத்தை காதலியுங்கள்...
அவரின் வீரத்தை காதலியுங்கள்...
அவரின் விவேகத்தை காதலியுங்கள்...
அவரின் ஆளுமையை காதலியுங்கள்...
சிந்தனைகளை செயலாக்கும் அவர்தம் செயல் திறமையை காதலியுங்கள்...
வல்லாதிக்க சக்திகளின் முன் மண்டியிட மறுத்த அவரின் துணிச்சலை காதலியுங்கள்...
அவர்தம் எளிமையை காதலியுங்கள்...
அவர்தம் நேர்மையை காதலியுங்கள்...
அவர்தம் வாய்மையை காதலியுங்கள்...
இலட்சியத்திற்காக உயிரை இழக்க துணியும் அவர்தம் அர்பணிப்பை காதலியுங்கள்...
பணம்,பதவி,புகழ்,இப்படி எதற்குமே ஆசைப்படாது அனைத்தையும் துறந்து களத்தில்நின்ற அந்த தியாக உணர்வை காதலியுங்கள்...
வருடத்திற்கொருமுறை மட்டும் வாய்திறந்து தான் பேசாது தன் செயல்களால் மற்றவரை பேசவைத்த தலைவரின் செயல்திறமையை காதலியுங்கள்...
வாழ்வின் சுகபோகங்களை துறந்து தமிழர் விடிவை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அந்த வீரமறவனை காதலியுங்கள்...
தலைவரை காதலியுங்கள் தலைவரின் தமிழீழ தாகத்தை காதலியுங்கள்...
அவருக்குள் இந்த பிரபஞ்சமே அடங்கும் இதில் காதல்மட்டும் விதிவிலக்கா என்ன... எழுத்தாக்கம் -பிரபா செழியன்
#புலிகளின்_தாகம்_தமிழீழ_தாயகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக