உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

mother a141

 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்துங்கள்! உக்ரைனுக்கு அதிவேக ஏவுகணைகளை அனுப்பும் அமெரிக்கா



ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்த உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.


உக்ரைன் - ரஷ்ய மோதல் 4 ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளதுடன், ரஷ்யாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.


இந்நிலையில் முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளதுடன்,போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


குறித்த ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த ஏவுகணைகள் இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.


அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் கேட்டுள்ள நிலையில் அமெரிக்கா ஏவுகணைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, உக்ரைனுக்கு 3 ஆயிரம் இயந்திர துப்பாக்கிகள், மற்றும் இராணுவ டேங்கிகளை எதிர்க்கும் 200 கையெறி ஏவுகணைகளை வழங்குவதாக பெல்ஜியம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 301 கொழும்பில் பிரித்தானியாவில் வசிக்கும் தம்பதியின் பையை திருடிய நபரை சுற்றிவளைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  கொழும்பில் பிரித்தானியாவில் வசிக்கும் தம்பதியின் பையை திருடிய நபரை சுற்றிவளைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில்...