சுவிஸில் இலங்கை தமிழ் இளைஞன் வெளியிட்ட பகீர் தகவல்!
சுவிஸ் நாட்டின் விமானநிலையம் ஒன்றில் இருந்து தாயகத்தை சேர்ந்த 10 ஆண்களும் (ஒரு முதியவர் உட்பட) 6 பெண்களும் உள்ளடங்களாக 16 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் திங்கள் (21.02.2022) இரவு 22:30 மணி அளவில் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
நாடுகடத்தப்பட்ட இவர்கள் ஒரு தனி விமானம் மூலம் 45 சுவிஸ் பொலிஸாரின் பாதுகாப்புடன் மற்றும் 1 சுவிஸ் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரியின் கண்காணிப்பில் இலங்கை விமான நிலையம் வரை சென்று நேற்றைய தினம் (22.02.2022) காலை 9:00 மணி அளவில் இலங்கை விமானநிலைய குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாடுகடத்தப்பட்டவர்களில் ஓர் இளைஞன் தனக்கு இலங்கைக்கு சென்றால் இலங்கை அரசினால் உயிர் ஆபத்து இருப்பதாக கூறி செல்ல மறுத்த போது அவரின் கை, கால்கள் இறுக்கமாக கட்டப்பட்டு மனிதாபிமானம் அற்ற முறையில் விமானத்தில் அமர்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
விமானம் வானில் பறந்து சுமாராக ஒரு மணித்தியாலங்கள் வரை கை, கால்கள் இறுக்கமாக கட்டப்பட்டு இருந்த இளைஞன் அதன் பின்னர் கட்டுக்கள் நீக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் அவ் இளைஞனின் கழுத்தும் அமத்தப்பட்டு துணிகளால் ஆன தலைக்கவசம் அணிவிக்கப்பட்டு தான் துன்புறுத்தப்பட்டே நாடுகடத்தப்பட்டதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரின் கை, கால்கள் மிகுந்த வேதனையுடன், இரத்த கண்டிப்பு அடையாளங்கள் தன் உடம்பில் இருப்பதாக தனது நெருங்கிய நண்பருக்கு புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
அத்துடன் தான் மிகுந்த மன அழுத்தத்துடனும் இருப்பதாகவும் இலங்கை அரசினால் தனது உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பயத்துடன் இருப்பதாக கருத்து வெளியிட்டுள்ளார்.
அனுப்பப்பட்டவர்களில் முதியவர் ஒருவர் கீழே விழுந்து கையில் காயம் உண்டானது அவருக்கும் உடனடியாக மருந்து கட்டப்பட்டு எதுவித மனிதாபிமானமும் இன்றி இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என அந்த விமானத்தில் பயணித்த இன்னுமோர் அகதி தஞ்ச கோரிக்கையாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக