உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

mother a124

 முல்லைத்தீவில் வீடொன்றில் நகைகளை அள்ளிச் சென்றோர் யாழில் சிக்கினர்



முல்லைத்தீவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த டிசம்பர் மாதம் முல்லைத்தீவு நகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் 20 பவுண் நகை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே மூவர் இன்றைய தினம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.


சாவகச்சேரி ,நெல்லியடி ஊர்காவற்துறை, ஆகிய இடங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.


இவர்களிடமிருந்து 17 பவுண் நகையும் மீட்கப்பட்டுள்ளதாகவும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தெரிவித்தார்.


கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...