உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 3 பிப்ரவரி, 2022

mother a91

 சின்ன வெங்காயத்தில் இருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்! தவறாம பயன்படுத்துங்க


 


  


சின்ன வெங்காயம், உள்ளி வெங்காயம், சாம்பார் வெங்காயம் என பல பெயர்களால் அழைக்கப்படும் நாட்டு வெங்காயம் சித்த வைத்தியத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.


சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்றாக அறியப்படுகின்றது, தென் இந்தியாவில் பிரபலமானது. தற்போது பெரிய வெங்காயமே அதிக அளவில் வெங்காயமாக பயன்படுத்தப்படுகிறது.


இருப்பினும், பெரிய வெங்காயத்தை விட, சின்ன வெங்காயத்தின் தான் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. தாய்ப்பாலை அதிகரிக்க வைக்கும் நாட்டு வெங்காயம், பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. 


மேலும், சின்ன வெங்காயத்தில், கார்போஹைட்ரேட், சர்க்கரை, நார்ச்சத்து, புரதம் உள்ளன. அதோடு, தயமின் (B1), ரிபோஃபிளாவின், நியாசின், பான்டோதெனிக் அமிலம், விட்டமின்கள், உயிர்ச்சத்து சி, கால்சியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் என அபரிமிதமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.


தாம்பத்தியத்தில் ஆர்வம் ஏற்படுத்தவும் சின்ன வெங்காயம் உதவும் என்ற நம்பிக்கையும் உண்டு. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்பும் சின்ன வெங்காயத்தில் உண்டு.


குடல் புண்கள், வீக்கம் காயம் என பல பிரச்சனைகளுக்கு தீர்வாகும் சின்ன வெங்காயத்தில் கரையும் நார்ச்சத்து, அல்லிசின் என்ற சல்ஃபைட் உள்ளது. சின்னவெங்காயத்தில் புரதம், தாது உப்புக்கள், விட்டமின்கள் என நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.  


பித்தத்தைக் குறைக்கும் அருமருந்தாக சின்ன வெங்காயத்தை தமிழகத்தில் பயன்படுத்துகின்றனர். மேலும் இது, ரத்த விருத்திக்கு உதவுவதோடு, ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சின்ன வெங்காயம், மூல நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் நம்பிக்கை. 


இதேவேளை, சின்ன வெங்காயத்தின் தோலை எடுத்து அதை தலையணை போல் செய்து நாற்காலி குஷன் போல பயன்படுத்துவார்கள். இதற்கு காரணம் தெரியுமா? மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகப் பெரிய நிவாரணத்தைத் தரும்.


அதேபோல, நாற்காலியில் அமர்ந்தே வேலை செய்யும் பணியில் இருப்பவர்கள், தங்களுடைய இருக்கையில் இந்த சின்ன வெங்காயத் தோலால் செய்யப்பட்ட குஷனை வைத்து அமர்ந்தால், மூல நோய் ஏற்படுவதை தடுக்கும் என்றும், உடல் சூடு குறையும் என்றும் கூறப்படுகிறது.


தென்னிந்தியாவில் சமையலில் அதிக பங்கு வகிக்கும் சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்று. தென்மேற்கு ஆசியாவில் தோன்றினாலும், தென்னிந்திய சமையலில் ராணியாக மகுடம் சூடி இருக்கும் சின்ன வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் அதை அதிகம் பயன்படுத்தத் தூண்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...