இளைஞர் குழுக்களுக்கிடையில் அடிதடி!! கலவர பூமியான வைரவபுளியங்குளம் (படங்கள்)
வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுடன் வந்த குழுவினருக்கும் பிறிதொரு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலால் வவுனியா வைரவபுளியங்குளம் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதி கலவரபூமியாக மாறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா வைரபுளியங்குளம் பகுதியில் கடந்த இரு தினங்களாக இளைஞர் குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக அடிதடி சம்பவங்கள் இடம்பெற்றுவந்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை குறித்த பகுதியில் அதிகளவான இளைஞர்கள் குழுமியிருந்தனர்.
இதனையடுத்து அந்தப்பகுதிக்கு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், தனது சகாக்களுடன் சென்றிருந்தார்.
இதன்போது இளைஞர்கள் சிலருக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டதுடன், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதேவேளை சற்றுநேரத்தில் குறித்த பகுதிக்கு வந்திறங்கிய மற்றொரு குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினருடன் வருகைதந்திருந்த சகாக்களை தாக்கத்தொடங்கினர், அவர்களும் திருப்பித்தாக்கினர்.
இதனால் இருதப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்றதுடன் நாடாளுமன்ற உறுப்பினரையும் தாக்க முற்பட்டனர்.
குறித்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் சற்றுநேரம் பதட்டநிலை ஏற்பட்டது. சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் ஏறி தனது அலுவலகம் நோக்கிச்சென்றார்.
எனினும் அவரது சகாக்களை துரத்திச்சென்ற குழுவொன்று மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் அலுவலகத்திற்குள் உட்புகுந்து தாக்க முற்பட்டது.வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தலமையிலான குழு நாளை ஜெனீவா விஜயம்
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று நாளை ஜெனீவா விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவில் நீதி அமைச்சர் அலி சாப்ரியும் உள்ளடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்கும் நோக்கில் இந்தப் பிரநிதிகள் குழு நாளை ஜெனீவா புறப்பட்டுச் செல்ல உள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி இலங்கை குறித்த அறிக்கை மனித உரிமைப் பேரவையில் வெளியிடப்பட உள்ளது.
இந்த தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு எதனையும் நடாத்தப் போவதில்லை என மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஆட்சியை இராணுவமயப்படுத்தல், பயங்கரவாத தடைச் சட்டம் சர்வதேச தரத்திற்கு மாற்றியமைக்காமை, பொலிஸ் கைதுகளின் மத்தியில் மரணங்கள் நிகழ்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரினால் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.