தவறான உறவே காரணமாகயிருக்கலாம் என முதியவர்கள் தெரிவிப்பு?
வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் சிற்றூழியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் நேற்றிரவு (05-09-2024) அவரது வீட்டில் இருந்த நிலையில் இன்று (06-09-2024) அதிகாலை அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உறவினர்கள் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 39 வயதான லோயினி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
அவரது கணவர் அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் நிலையில் ஒருசில நாட்களுக்கு முன்பாகவே நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக