யாழில் மனைவியின் கிரியையின்போது பரிதாபமாக உயிரிழந்த கணவன்! பெரும் சோக சம்பவம்
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மனைவியின் அந்தியேட்டி கிரியையின் போது கணவனும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (09-09-2024) யாழ்ப்பாணம் காரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
காரணவாய் பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த ஓகஸ்ட் மாதம் உயிரிழந்திருந்தார்.!
உயிரிழ்ந்த குடும்ப பெண்ணின் அந்தியேட்டி கிரியைகள் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இதன்போது, உயிரிழந்த பெண்ணின் கணவனான முத்தன் தர்மலிங்கம் என்பவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக